ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

0
96
azvharthirunahiri

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குச திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், தன்னார்வ தொண்டர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன் வரவேற்றார். ஆழ்வார்திருநகரி கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் முகாமினை துவக்கி வைத்தார்.

முகாமில், கண் மருத்துவர் தரணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் ஆழ்வார்தோப்பு, நவலெட்சுமிபுரம், கேம்லாபாத், ஆழ்வார்திருநகரி, மளவராயநத்தம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

இதில், பகுதி பொறுப்பாளர்கள் முருகசெல்வி, சண்முககனி, மையத்தலைவர்கள் உஷா, ஆயிஷா, சித்திமா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தன்னார்வ தொண்டர் வினோத் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here