தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் முருகன் (59) தனக்கு சொந்தமான லாரியை 20.11.2021 அன்று அவரது வீட்டின் பின்புறம் நிறுத்தியிருந்தார்.
மர்ம நபர்கள் அந்த லாரியை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து முருகன், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த கடற்கரை மகன் ரமேஷ் (24) மற்றும் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வம் (28) ஆகியோர் சேர்ந்து லாரியை திருடியது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,75,000/- மதிப்பிலான லாரியையும் பறிமுதல் செய்தனர்.