நாசரேத்-ல் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணியினர் கோவிலில் பிரார்த்தனை !

0
91
nazateh news

நாசரேத், மார்ச்.06: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றி யம் நாசரேத் அருள்மிகு செல்வவி நாயகா் கோவில் இருக்கிறது. அந்த கோவில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து தொடா் நாமா பிராத்தனை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வெட்டுபெருமாள் தலைமை வகித்தார். இந்து முன்னணி நகர துணைத் தலைவர் தியாகராஜன் முன் னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளா் டாக்டா். அரசுராஜா,நெல்லை கோட்ட செய லாளா்பெ.சக்திவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சி யில் ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவா் ஓடைமுருகேசன்,ஆழ்வார் திருநகரி ஒன்றிய பொதுச் செயலா ளர் திருமுருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய துணைத் தலைவர் முருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயற்குழு உறுப்பினா் வரதன், நாசரேத் நகர பொதுச் செயலாளா் ரமாஷ், நாசரேத் நகர பொருளாளா் சிவமாலை, நாசரேத் நகர துணைத் தலைவா் ராமநாஸ், நாசரேத் நகர செயற்குழு உறுப்பினா் சுந்தர்ராஜன், செய்தி தொடா்பாளா் சரவணன், இந்து முன்னணி பொறுப்பாளா் அருணாச்சலம், சாத்தான்குளம் ஒன்றிய துணைத் தலைவா் சுப்பிரமணியன், இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா் பரமேஸ்வரி, உமாகணேசன், விஜயா, உமாபரமானந்தன், லதாகோபால் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆழ்வார்திருநகரி ஒன்றியத் துணைத் தலைவா் அன்பு சுந்தர் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here