கால்நடை பராமரிப்பு துறையில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் !

0
85
minister udumalairadhakrishnan

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு வண்டானம் மற்றும் துறையூர் கிராமத்தில் தலா 30லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 2 கால்நடை மருந்தகங்களை தமிழக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். தொடர்ந்து குருவிநத்தம் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்தினையம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ , மாவட்ட ஆட்சியர் சந்தீநந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக மகளிர் குழுக்களுக்கு நிதி உதவியை வழங்கி கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில் தமிழகத்தில் கால்நடைத்துறையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10லட்சம் மகளிருக்கும் 40 லட்சம் வெள்ளாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 1லட்சம் மகளிருக்கு 1லட்சம் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது. நாட்டு கோழிகள் திட்டம் மூலமாக கடந்த ஆண்டு 50 ஆயிரம் மகளிருக்கு கொடுக்கப்பட்டது.

இந்தாண்டு 2லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு நாட்டு கோழிகள் வழங்கப்படவுள்ளது. தேவையான அளவு கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம்புல்ன்சை அழைத்தால் உங்கள் பகுதிக்கே வந்து அனைத்து உதவிகளும் செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டு இன மாடுகள், ஆடுகள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தலைவாசலில் 1550 கோடி ரூபாய் செலவில் 1800 ஏக்கரில் கால்நடை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்து விவசாயத்திற்கு இணையாக கால்நடைகள் கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டும் என்பது தான் அதனின் நோக்கம் என்றார்.

முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் படித்த பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கிராமங்களில் படிக்கமால், விவசாயக்கூலிகளாக, சொந்த நிலம் இல்லமால் வாழுபவர்கள், சுய சம்பாதித்து மகளிர் வாழ வேண்டும் என்பதற்காக தான் வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கினார்.அவரது வழியில் தற்பொழுதைய முதல்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here