நாசரேத் பொறியியல் கல்லூரியில் கணினியியல் பன்னாட்டு கருத்தரங்கு

0
225
nazareth school news

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணினியியல் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.

கணினித்துறை சார்பாக ஐசிசிடி’20 என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி தாளாளர் சசிகரன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கணினித்துறைத் தலைவர் நிஷா ரோஸ்பெல் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியின் கணினித் துறைத்தலைவர் பாபு ரெங்கராஜன், திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரியின் பேராசிரியை சஜிலின் லோறட் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினர்.

இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பின்னர் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நடுவர்களாக அறிவியல் மற்றும் மனித நேயம் துறைத்தலைவர் ஆக்னஸ் பிரேமா மேரி, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறைத்தலைவர் ஜெனிபர் ஜாண், இயந்திரவியல் துறைத்தலைவர் எபனேசர் டேனியல், தகவல் தொழில்நுட்;ப துறை பேராசிரியர் ஜெய்சன் ஆகியோர் செயல்பட்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் சசிகரன் தலைமையில் முதல்வர் ஜெயக்குமார், துறைத் தலைவர் நிஷா ரோஸ்பெல், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்கள் ரெஜினா எலிசபெத், மேரி ஏஞ்சலின் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here