தூத்துக்குடியில் அமைச்சர்கள், கலெக்டர், எம்.பி, மேயர் முன்னிலையில் நெய்தல் பாரம்பரிய விழா!

0
43
news

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நெய்தல் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. 3ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சனி கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விழா ஞாயிறு அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.

தூத்துக்குடி மகாமுனி குழுவினரின் சக்கை குச்சி ஆட்டம், சகா குழுவினரின் கிராமிய நிகழ்ச்சி கலைமாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, காரமடை சாமிநாதன் குழுவினரின் துடுப்பாட்டம், ஹாஜி ஜான் பாவா குழுவினரின் சிலம்பாட்டம், சமர்குழுவினரின் பறையாட்டம், ஓம் முத்துமாரி குழுவினரின் கலைநிகழ்ச்சி, செந்தில் – ராஜலட்சுமி குழுவினரின் இசைநிகழ்ச்சி, புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதே போன்று உணவுத்திருவிழா மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் நடந்தது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் கடந்த இரண்டு நாட்களைவிட பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். செந்தில்ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சியை அனைவர் கவனத்தையு ஈர்த்தது. ஓரே நேரத்தில் தலை மற்றும் முதுகு இரண்டு கைகளிலும் என நான்கு கும்பங்களை வைத்து தரையில் உருளை மீது பலகை வைத்து ஆடிய ஆட்டம் அனைவரையும் உற்சாகம் படுத்தும் விதமாக இருந்தது. பழைய காலத்து நினைவுகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் தாய்ப்பால் முதல் பானை சாப்பாடு மற்றும் முந்தைய காலத்து விளையாட்டுகளை இன்றைய காலத்தில் கடைபிடித்தால் 100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பதையும் எடுத்து காட்டும் விதமாக பாடல்கள் ஓலிப்பரப்பட்டன.

விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.பிக்கள் ஹெலன் டேவிட்சன், விஜிலாசத்யானந்த், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகசேன், ஒட்டப்பிடாரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வக்கீல் அணி துணை அமைப்பாளர் பூங்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் விஜயகுமார், கண்ணன், இசக்கிராஜா, பவாணி மார்ஷல், ஜான்சிராணி, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையாளர் சேகர், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, கருப்பசாமி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், பிரதிநிதி பிரபாகர், மற்றும் மணி, தளபதி பிச்சையா, மகேஸ்வரன்சிங், மதிமுக மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் நிறைவு விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவு பெறுகிறது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here