பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

0
28

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் பகுதியில் கல்குவாரி இருக்கிறது. அதில் வழக்கம்போல் கல் உடைக்கும் வேலை நடந்து வந்தது. பொக்லைன் மூலம் கல்யை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக பாறை ஒன்று உருண்டு விழுந்தது. சுப்பிரமணி, வினோத் என்ற 2 தொழிலாளர்கள் அதில் சிக்கி பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி மற்றும் துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த கல் குவாரி அனுமதி பெற்று இயக்கப்பட்டதா என்பது விசாரிக்கப்படுகிறது. விசாரணை முடியும் தற்காலிகமாக மூடி வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here