கடம்பூர் செ.ராஜு, எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி !

0
142
admk news

தூத்துக்குடி ஜூன் 7

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக அவைத்தலைவர் சாத்தான்குளம் பொன்பாண்டியன் மற்றும் அமமுக முக்கிய பிரமுகர் குமரகுருபரன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், அமமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருப்பவர் சாத்தான்குளம் பொன் பாண்டியன் மற்றும் அமமுக முக்கிய பிரமுகர் குமரகுருபரன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று (06.06.2020) தூத்துக்குடியில் உள்ள அரசு சுற்றுலா விருந்தினர் கூடுதல் மாளிகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு அவர்களை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்தவர்களை அமைச்சர், மாவட்டச் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்வின் போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், சிவத்தையாபுரம் விவசாய சங்கத் தலைவர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன்,

சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி, தூத்துக்குடி முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, மாநகர பகுதி கழக செயலாளர்கள் பி.என்.ராமகிருஷ்ணன், பொன்ராஜ்,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் இலக்கிய அணி நடராஜன், தனராஜ், உட்பட பலர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here