தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேர் பலி பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது – தமிழக சுகாதாரத்துறை தகவல்

0
94
tamilagam

தமிழகத்தில் நேற்று (14.06.20)ஒரே நாளில் 38 பேர் பலி பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவுகிறது நோய்த் தொற்று பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது நேற்று ஒரே நாளில் நர்ஸ் ஒருவர் உள்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போராடிக்கொண்டிருக்கிறது. என்னதான் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும் நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,415 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,196 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் பலியானார்கள். இவர்களில் ஒரு நர்ஸ் உள்பட 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 435 ஆக அதிகரித்திருக்கிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேர் புதிதாக நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்த 10 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும் அடங்குவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 170 பேர் ஆண்கள் 84 பேர் பெண்கள் ஆவர். இதுவரை இதுவரை 27 ஆயிரத்து 520 ஆண்களும் 17 ஆயிரத்து 174 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேரும் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 24 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 19 ஆயிரத்து 676 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று 38 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழந்தவர்களில் விருதுநகரைச் சேர்ந்த 34 வயது ஆண் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் உயிரிழந்து உள்ளார்.

மேலும் சென்னையில் 13 பெண்கள் உள்பட 31 பேரும் செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள். இதன்மூலம் உயிரிழப்பு 435 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 23 மாவட்டங்களில் பாதித்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 30 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், சென்னையை சேர்ந்த ஆயிரத்து 415 பேரும், செங்கல்பட்டு சேர்ந்த 178 பேரும், திருவள்ளூரில் 81 பேரும், திருவண்ணாமலையில் 35 பேரும், காஞ்சிபுரத்தில் 32 பேரும், ராமநாதபுரத்தில் 23 பேரும், நெல்லையில் இருபத்தி ஒரு பேரும், விழுப்புரம், தென்காசி, மதுரையில் தலா 16 பேரும், சிவகங்கையில் 15 பேரும், கள்ளக்குறிச்சியில் 14 பேரும், திண்டுக்கல்லில் 11 பேரும், சேலத்தில் 10 பேரும், வேலூர், திருச்சியில் தலா 9 பேரும் திருவாரூர், தேனியில் தலா 8 பேரும், நாகப்பட்டினம், விருதுநகரில் தலா ஏழு பேரும், ராணிப்பேட்டையில் 6 பேரும், தஞ்சாவூரில் நாலு பேரும், கோவையில் 3 பேரும், கன்னியாகுமரி, திருப்பத்தூரில் தலா இரண்டு பேரும், திருப்பூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, தர்மபுரியில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 18,182 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 599 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 401 பேருக்கு பாதிப்பு இல்லை என்றும் 537 பேரின் மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 76 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட 326 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 2,027 குழந்தைகளும் 60 வயதுக்குட்பட்ட 5,559 முதியவர்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 200 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 85 பேரும், ரயில் மூலம் வந்த 309 பேரும், சாலை மார்க்கமாக வந்த ஆயிரத்து 1,507 பேரும், கப்பல் மூலம் துறைமுகம் வந்த 5 பேர் என மொத்தம் 2,106 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here