விமானிகள் உணவு எடுத்து வர தடை

0
32

டிபன் பாத்திரத்தை யார் முதலில் கழுவுவது என்பது தொடர்பாக விமானிக்கும், விமான பணிக்குழுவை சேர்ந்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், இனி விமான பணியாளர்கள் யாரும் உணவை எடுத்து வரக்கூடாது என ஏர்இந்தியா நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பெங்களூருவில் இருந்து கோல்கத்தாவிற்கு காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர்இந்தியா விமானத்தின் விமானிக்கும், விமான பணிக்குழுவை சேர்ந்தவருக்கும் இடையே டிபன் பாத்திரத்தை யார் முதலில் கழுவுவது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக விமானம் புறப்படுவது 2 மணிநேரம் தாமதம் ஆனது.
தனிப்பட்ட மோதல் காரணமாக விமானம் புறப்படுவது தாமதம் ஆனதற்கு ஏர்இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. அத்துடன், இருவரையும் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஏர்இந்தியா உயரதிகாரி ஒருவர் கூறுகையில், விமாரணைக்கு பிறகு இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விரைவில் விமானத்தில் விமானிகள் யாரும் உணவை எடுத்து வரக்கூடாது என்ற தடை உத்தரவு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு முன் மார்ச் மாதம், இதே போன்றதொரு சம்பவத்தால் விமானிகள் யாரும் தங்களுக்கு சிறப்பு உணவை ஆர்டர் செய்யக் கூடாது என ஏர்இந்தியா உத்தரவிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here