”சி.பி.ஐ விசாரணை நடத்த திமுக வழக்கு தொடரும்” – சாத்தான்குளத்தில் உதயநிதிஸ்டாலின் பேட்டி

0
51
uthayanithi staline

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், மர்மாக இறந்து போன வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற அவர்கள் வீட்டிற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்றார்.

குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதிஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். ‘’விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டவர்களின் நிலமை என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும். இது சம்மந்தமாக காவல்த்துறையை கண்டித்து தலைவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 25 லட்சம் திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இப்போது திமுக இளைஞரணி சார்பில் இந்த குடும்பத்தினரை சந்தித்த ஆறுதல் கூற வந்தோம். அவர்கள் சொன்ன வார்த்தைகளை பார்க்கும்போது எனக்கே பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி ஊரில் விசாரித்து பாருங்கள். ஊரில் ஒருத்தராவது அவர்கள் மோஷம் என சொல்லமாட்டார்கள் என்று குடும்பத்தினர் சொல்கிறார்கள். அப்படிபட்டவர்கள், எப்படி போலீஸாருக்கு குற்றவாளியை போல் தெரிந்தார்கள் என்று தெரியவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் ஒருத்தர் மூச்சு திணறலாலும் இன்னொருத்தர் காய்ச்சல் காரனமாக உயிரிழந்தார் என முதல்வர் சொல்வது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. அதிகாரிகளால் இரண்டு கொலைகள் நடந்திருக்கிறது.

இதற்கு ஆளும் அரசே பொறுப்பேற்க வேண்டும். சரியான நடவடிக்கை எடுக்க தவறினால் முறையாக நடவடிக்கை எடுக்க சொல்லி திமுக சார்பில் வழக்கு தொடருவோம். இந்த குடும்பத்தார் தைரியமாக இருக்க வேண்டும். திமுக சட்டபடி நடவடிக்கை எடுக்க உங்களுக்கு பக்க பலமாக இருக்கிறது.

கோவையிலும் இதுபோன்று சிறுவனிடம் அத்துமீறி போலீஸார் நடந்து கொண்டனர். இந்த அரசும் அதிகாரிகளும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். திமுக என்றைக்கும் வணிகர்களுக்கு துணையாக இருக்கும். இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்க கூடாது’’ என்றார்.

அவருடன் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், சட்டமன்ற உறுப்பினர் அனிதாராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

கொரோனா காலமான இந்த நேரத்தில் பல்வேறு தடைகளை கடந்து பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறவேண்டும் என அக்கறையோடு வந்திருந்த உதயநிதிஸ்டாலினை அங்குள்ளவர்கள் வியப்பாக பார்த்தனர். உண்மையில் ஆறுதல் அடைந்திருப்பதாக அங்குள்ள சிலர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here