தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் வாயில் கருப்பு துணிகட்டி பதாகைகள் ஏந்தி இணைய வழியில் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், 1.தமிழகத்தில் பேஜ் லைசன்ஸ் பெற்றுள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் 20000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், 2. பொது பயன்பாட்டு வாடகை வாகனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் EMI களுக்கு விதிக்கப்பட்ட வட்டி நீக்கப்பட வேண்டும், 3.பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது வாடகை வாகனங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் நாள் ஒன்றுக்கு 20லிட்டர் டீசல் வழங்கப்பட வேண்டும்,

4. ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், கால் டாக்ஸி (வாடகை கார்) மற்றும் மேக்ஸி கேப்களுக்கு முறையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், 5. அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் அரசு சார்பில் COVID-19 இன்சூரன்ஸ் வழங்கப்பட வேண்டும், 6. ஊரடங்கு காலத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட காலாண்டு சாலை வரிகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

தூத்துக்குடி, ஏரல், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகர் புறங்களில் பல பகுதிகளிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட செயலாளர். M.ஜெயராஜ். மாவட்ட பொருளாளர் P.ரவீந்திரன் மாவட்ட துணைச் செயலாளர். K. ராசிக் முஸ்ஷாமில் மற்றும் பகுதி பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.