அகில இந்திய மனித வள பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

0
91
congress

தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய மனித வள பேரவை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 118 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.

விழாவிற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகரும், அகில இந்திய மனிதவள பேரவை தலைவருமான வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து வ.உ.சி மார்க்கெட் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பஜாரில் கலைச்செல்வி சேரிட்டபுள் டிரஸ்ட் நிறுவனர் சீனிவாசன் தவைமையில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.

அதனைத் தொடர்ந்து சாலையோர மனநலம் பாதிக்கபட்டவர்களுக்கு உணவு வழங்கபட்டது. அதன்பின்னர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகிருஷ்ணன்,துணை பொது செயளாளர் மரியஅந்தோணிவளன்,பொருளாளர் கதிரேசன்,

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கமணி திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் காயல்பட்டணம் நகர தலைவர் அப்தாகீர் தூத்துக்குடி நகர துணை செயலாளர் வெங்கட்ராம் மற்றும் நிர்வாகிகள் சமையல் பாபு ,ராஜா,முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here