கோவில்பட்டியில் பால் விலை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
33

தமிழகம் முழுவதும் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஸ்கேனர் முறையில் பால் பரிசோதனை செய்து இணைய தளத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும். சங்கம் வழங்கும் பாலுக்கு கொள்முதல் விலையாக பசும் பால் லிட்டருக்கு ரூ.40, எருமை பால் லிட்டருக்கு ரூ.50 என உயர்த்தி வழங்க வேண்டும். கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் சங்கம் அனுப்பும் பாலின் தரத்தை வேண்டுமென்றே குறைத்தல் மற்றும் விலை குறைப்பு போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து குளிரூட்டும் நிலையத்திலும் கணினி மயமாக்கப்பட்ட பால் தரம் பார்க்கும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். மொத்த பால் கொள்முதல் என்ற பெயரில் ஆவினை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கை கண்டித்தும், கூட்டுறவு சங்கத்தை காப்பாற்ற கோரியும் கோவில்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முகமது அலி, தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த ராமசுப்பு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் மகாலிங்கம், கடலையூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன், எட்டயபுரம் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெயராமன் , சி.பி.எம் நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here