சாத்தான்குளம் பகுதியில் 2 நாளில் 13பேருக்கு கொரோனா – விரைவான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0
87
sathankulam corona

சாத்தான்குளம், ஜூலை 27:

சாத்தான்குளம பகுதியில் இருநாளில் 13 பேருக்கு கரோனா அறிகுறி தெரியவந்துள்ளது. தற்போது இப்பகுதியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கொரோனா பரவுவது தடுக்கப்படும் வகையில் மத்திய, மாநில் அரசுகள் பொது முடக்கம் அமல் படுத்தியுள்ளது. தற்போது பொது போக்குவரத்து இல்லமல் தளர்வுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 31ஆம்தேதி வரை உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று கிராமங்களில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் கரோனா அதிகரிக்கும் பகுதியில் மக்கள் பங்களிப்புடன் கடை அடைப்பு உள்ளிட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதன்படி சாத்தான்குளத்தில் மே 31ஆம்தேதி வரை கடை அடைப்பு என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால் தற்போது ஒரு சில கடைகள் திறக்க தொடங்கியுள்ளன. இதனால் மக்களும் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர். இதற்கிடையே சாத்தான்குளம் பகுதியில் கடந்த 16ஆம்தேதி முதல் திங்கள்கிழமை வரை சுமார் 47பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளன. அதில் சங்கரன்குடியிருப்பில் இரு குழந்தைகளுக்கும், பெரியதாழை, அமுதுண்ணாக்குடி, உள்ளிட்ட பகுதிகள் என 5பேருக்கு என 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் கரோனா சிகிச்சை வார்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இதில் சங்கரன்குடியிருப்பு பகுதியில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை வர மறுத்து சுகாரத்துறையினரை மிரட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் சங்கரன்குடியிருப்பு உள்ளிட்ட கரோனா பாதிப்புக்குள்ளான பகுதியில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. கிராமங்களில் கரோனா பாதிப்புக்குள்ளான நபர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தி அதற்கான மருந்துகள் உட்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் கரோனா தொற்று உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். ஆனால் சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் பலருக்கு காய்ச்சல், உடல் சோர்வு, உடல் அசதி உள்ளிட்டவை உள்ளதாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். ஆனால் யாரும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படவில்லையென மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது காய்ச்சல் அறிகுறியுடன் பலர் தனியார் மருத்துவமனைகளை நாடுவதால் சாத்தான்குளத்தில் தனியார் மருத்துவமணைகளும் மூடப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையினரும் முழு வீச்சில் களத்தில் இறங்கி சுகாதாரப்பணிகள் செய்து வருகின்றனர். ஆனால் காய்ச்சல்அறிகுறி உள்ளவர்கள் சுகாதாரத்துறையினரிடம் தெரிவிக்காததால் அவர்களால் சாத்தான்குளத்தில் கரோனா தொற்று வேகமாக பரவும் நிலை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதலால் காய்ச்சல், உடல் சோர்வு, சுவை இன்மை தன்மையுள்ளவர்கள் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று அதற்கான மருத்துவ பரிசோதனை நடத்தி தங்களை தனிமைப்படுத்தி சாத்தான்குளம் பகுதியில் கரோனா பரவதை தடுக்க உதவிட வேண்டும் என சுகாதாரத்துறையினரும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here