தூத்துக்குடி தாளமுத்து நகரில் கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்து இளைஞர் பலி

0
73
thalamuthunagar death

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் அடுத்துள்ள வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 16) பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு டிரைவருக்கு உதவியாளாக வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் சூரிய பிரகாஷ் இன்று காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டு எதிரே உள்ள கழிவுநீர் தொட்டி மீது நின்று கை கால்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்தது. இதில் நிலைகுலைந்த சூரியபிரகாஷ் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சூரிய பிரகாஷ் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 10 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தில் மயக்கமடைந்த சூரியபிரகாஷை மீட்டு அக்கம்பக்கத்தினர் மேலே கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சூரியபிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கூலி வேலைக்கு சென்று சென்று விட்டு வீட்டிற்கு சாப்பிட வந்த இளைஞர் கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தாளமுத்து நகரில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here