தந்தை இறந்த ஒரு மாதத்தில் போலீஸ்கார மகன் தூக்குப்போட்டு தற்கொலை – விளாத்திகுளம் அருகே சம்பவம் !

0
62
police sucid news

தந்தை இறந்த ஒரு மாதத்தில் போலீஸ்கார மகன் இன்று தற்கொலை செய்து கொண்டார். விளாத்திகுளம் அருகே சங்கர்லிங்கபுரத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் ஊரை சேர்ந்தவர் இருதையராஜ். இவருடைய மகன் கெளரிசங்கர்(30). 2011 ஆண்டு பேட்ஜ் ஆன இவர் தற்போது தருவைகுளம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி ஜெனிபா(29). காவல்துறையில் 2018 ஆண்டு பேட்ஜ் ஆன இவர், ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

இந்தநிலையில் இன்று(27.06.2019) காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கெளரிசங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்து வந்த நாகலாபுரம் போலீஸார், கெளரிசங்கரின் உடலை கைப்பற்றி, விளாத்திகுளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகலாபுரம் போலீஸார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ’’உடல்நலக் குறைவாக இருந்து வந்த இருதையராஜ், கடந்த மாதம் இதே நாளில் அதாவது 27-ம் தேதி இறந்து போனார். அவருடைய உடலை புதிதாக கட்டியிருக்கும் தன்னுடைய வீட்டிற்குள் வைக்க வேண்டும் என கெளரிசங்கர் விரும்பினாராம்.

அதற்கு ஜெனிபா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து கெளரிசங்கர் வற்புறுத்தவே ஜெனிபா விட்டுவிட்டார். அதனை தொடர்ந்து இறந்த உடலை வைத்த இடத்தில் உள்ள டைல்ஸ்யை மாற்ற வேண்டும் என ஜெனிபா, கெளரிசங்கரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கெளரிசங்கர் சம்மந்தம் தெரிவிக்கவில்லையாம். இது குறித்து அவர்களிடையே வருத்தங்கள் இருந்து வந்திருக்கிறது.

இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் கொண்டு விடுவதற்காக ஜெனிபா, குழந்தைகள் இரண்டையும் மொபட்டில் அழைத்து சென்றார். திரும்பி வந்து பார்க்கும்போது அப்படியொரு சம்பவம் நடந்திருந்தது தெரிய வந்தது.

தந்தை கடந்த மாதம் 27 ம் தேதி இறந்து போனார். மகன் இன்று(27-ம்தேதி) தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here