பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா

0
29
sathankulam

சாத்தான்குளம், ஆக. 3:

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் திருககல்யாண வைபவம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா கரானா தடுப்பு பணியால் அரசு விதித்துள்ள நடைமுறைப்படி ஆடித்தபசு திருவிழா கடந்த 23ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. . இதையடுத்து அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது இதில் அரசு விதிப்படி பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து வந்து சுவாமியை வழிப்பட்டனர்.

இதையடுத்து கோயிலில் ஆக.1ஆம்தேதி வரை 10 நாள்கள் குருகால்பேரி,பெருமாள்குளம் சாலைப்புதூர், தேர்க்கன்குளம், விராக்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், பழனியப்பபுரம், தெற்குபேய்க்குளம், கோமானேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் பல்வேறு பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நிறைவு நாள 7மணிக்கு சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி, அதனை தொடர்ந்து சுவாமிஅம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here