ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் – தூத்துக்குடி இன்டஸ்ட்ரியல் சப்ளையர்ஸ் அசோசியேசன் கோரிக்கை

0
209
sterlite news

தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த இரு ஆண்டுகளாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகம் மற்றும் இந்திய அளவில் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ஸ்டெர்லைட் ஆலை பேருதவியாக இருந்தது. தற்போது அந்த ஆலை நிறுத்தப்பட்டு இருப்பதால் அதை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமல்லாது அது சார்ந்த உற்பத்தி ஊடகமும் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கை அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது தொழில் சார்ந்த அமைப்பினரும் தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தூத்துக்குடி இண்டஸ்ட்ரியல் சப்ளையர் அசோசியேசன் அதாவது தூத்துக்குடி தொழில்துறை விற்பனர்கள் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில்,”தொழில் துறை விற்பன்னர்கள் சங்கத்தை சேர்ந்த நாங்கள் தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்கள். பல வருடங்களாக இங்கேயே வசித்து வருகிறோம். நாங்கள் இங்கு உள்ள பல தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் தளவாட பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.

எங்கள் மற்றும் எங்களை சார்ந்துள்ள பல ஆயிரம் பேர் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளை நம்பியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் இங்கு உள்ள அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களின் செயல்பாடு நஷ்டத்தில் உள்ளதால் அவர்கள் மூடும் நிலைக்கு சென்று உள்ளன. நிலையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையும் மூடப்பட்டுவிட்டது.

இதன் தொடர்ச்சியான பாதிப்புகளில் இருந்து நாங்கள் மீளமுடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். மேலும் Covid-19 பெரும் தொற்று காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு தொழில் வளர்ச்சி முடங்கி போயுள்ளது. வேலையின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டால் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும். பல்லாண்டு காலம் தூத்துக்குடி பகுதியில் வசித்து வரும் நாங்களும், ஸ்டெர்லைட் ஆலையில் பணி புரியும் எங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்தோடு ஆரோக்கியமாகவே உள்ளோம்.

ஆனால் வதந்திகள் காரணமாக மக்களிடையே பதற்றம் மற்றும் பயத்தை உண்டாக்கி போராட்டம் தூண்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலை மூடப்பட்டது. அரசாங்கம் பொது மக்களின் உணர்வுகளின்அடிப்படையில் ஆலையை மூடியதாக கூறியது.

தொழிலாளர்கள் வருமானம் இல்லாததால் பல்வேறு இன்னல்களுக்கு இப்போது ஆளாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 26 மாதங்கள் ஆகியும் இன்னமும் மாற்று வேலை கிடைக்காமல் அன்றாட வாழ்வுக்கே திண்டாடி வருகிறோம்.

நல்ல முறையில் இயங்கி வந்த இந்த ஆலை தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இந்த ஆலையின் மூலமாக 3000 பேர்ஒப்பந்த பணியாளர்களாகவும், தொழில்துறை விற்பன்னர்களை சார்ந்த பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்களும் நூற்றுக்கணக்கான தொழில் இந்த ஆலயம் மூலமாக வரும் product -ஐ மூலப்பொருளாக கொண்டும் மற்றும் இந்த அனைத்தையும் சார்ந்துள்ள பல்வேறு தொழிலாளர்களும் (hotelhotel ,restaurant, provisional stores, petty shops, consumer goods shops, mechanics, rentals, petrol bunks and acceptor) பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க தக்க நடவடிக்கை எடுத்து எங்களின் குறைகளை தலைமைச் செயலர் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி தூத்துக்குடி பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here