தவறை தடுக்க வேண்டுமா.. ஆலையையே மூடவேண்டுமா.. – ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தடுமாறும் தமிழக அரசு ?

0
59
srelite news

இந்து நாளிதழின் பிசினஸ் லைன் கட்டுரையிலிருந்து..

தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, தனது விரிவாக்கப்பணியை தொடங்கியது. சுற்றுப்புறம் மாசுபடுவதாக விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வலுவான எதிர்ப்பு போராட்டம், 13 பேர் உயிரை குடித்தது. அதனைத் தொடர்ந்து மே 2018-ல் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மாசுபடுத்துவதாகக் கூறி மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் மறுபடியும் ஆலையை திறக்க அனுமதிகேட்டு சென்னை உயர்நீதிமன்றதிற்கு சென்றது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். அந்த கோரிக்கையை நிராகரித்த நீதி மன்றம், தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது.

முறையான அனுமதியுடன் அமைக்கப்பட்ட, பொருளாதாரத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் பங்களிப்பு செய்துக்கொண்டிருந்த ஒரு ஆலையை இழுத்து மூடுவது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அது கண்டிப்பாக மாசுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்துகிறது என்ற குற்றம் உண்மையாக இருந்தாலும் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் சாத்தியமா இல்லையா? என்று இந்து நாளிதழின் பிசினஸ் லைன் கேள்வி எழுப்பியுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு ஒத்துழைத்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எங்கெல்லாம் ஒத்துழைக்கவில்லையோ அதற்கெல்லாம் நியாயமான காரணங்களும் இருக்கின்றன.

உதாரணமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ‘அனுமதியை புதுப்பித்தல்’ சான்று. இதில் 32 சிறப்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல புதிய நிபந்தனைகள் என்றும், அதை அமல்படுத்த அவகாசம் தேவை என்றும், இவை மூடுவதற்கான காரணங்களாக இருக்கக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் கோரிக்கை வைத்தது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்குழு 2018 பிப்ரவரி 27-இல் ஒரு அறிக்கையை அளித்தது. அதில் நீர் சட்டத்தின் கீழ் 22 நிபந்தனைகளையும் காற்று சட்டத்தின் கீழ் 18 நிபந்தனைகளையும் விதித்த பின்னர் செயல்பட ஒப்புதல் அளிக்கலாம் என பரிந்துரை செய்தது.

காற்று, நீர் மற்றும் காப்பர் கசடு மற்றும் ஜிப்சம் குவித்தல். தூத்துக்குடியில் மாசு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடிந்தது. ஆனால் அதற்கு ஸ்டெர்லைட் தான் காரணம் என்று உறுதியாக நிரூபிக்க முடியவில்லை.

ஏனெனில் இதே பகுதியில் 67 மற்ற சிவப்பு பிரிவு தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதில் பல ஆண்டுகாலமாக இயங்கி வரும் 5000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் தொழிற்சாலையும் அடக்கம். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி இதன்பேரில் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவை தாண்டி அவை ஏதும் நடத்தப்படவில்லை.

நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு உப்பு உருவாக்குவதற்காக அதிகபட்சமாக உப்புத் தண்ணீரை எடுப்பது, தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் கண்டுபிடிப்புகள், இந்த மண்ணின் தன்மை காரணமாக மாசுகள் நிலத்தடியில் எளிதில் பாய இவை அனுமதிக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் தரத்தை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் காண்பிக்கவில்லை.

ஸ்டெர்லைட் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு கசடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஏற்கனவே ஒப்பந்தம் இருந்தாலும், அந்த ஸ்லாக்கிற்கு ஸ்டெர்லைட் தான் பொறுப்பு என்று கூறுவதை ஸ்டெர்லைட் ஏற்கவில்லை. ஒருவேளை ஸ்டெர்லைட் கூறுவது இங்கே மிகவும் தவறானது என்றாலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க முடியாதா?

தவறுகளை தடுப்பதற்கு பதிலாக ஆலையையே மூடிவிடுவதுதான் சரியான நடவடிக்கை என தமிழக அரசு எண்ணுகிறதா? அந்நிய முதலீடுகளை கவரப்போகிறோம் என அவ்வப்போது சொல்லி வரும் தமிழக அரசு, இதுபோன்ற நடவடிக்கையால் தொழில் வளர்ச்சியை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்திருக்கிறதா? தவறான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது.

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here