ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 3537 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது – தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தகவல்

0
608
collector

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 3537 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்துரி தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

’தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 27.12.19 மற்றும் 30.12.19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி மற்றும் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், இரண்டாம் கட்ட தேர்தல் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

முதற்க்கட்டமாக டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் தேர்தலில் 1542 பதவிகளுக்கும் 640 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் . இதில் வாக்களிக்க 401466 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்டமாக 30ம் தேதி நடைபெறும் தேர்தலில் 1995 பதவிகளுக்கு 1178 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 400691 வாக்காளர்கள் வாக்களர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 824 வாக்குப்பதிவு மையங்களிலும் இரண்டாவது கட்டத்தில் 5ஊராட்சி ஒன்றியங்களில் 994 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றார்.இதில் 540 வாக்கு பதிவு மையங்கள் பதட்டமான வாக்குப்பதிவு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மைக்ரோ அப் சர்வர்கள் பணயமர்த்தபட உள்ளது’ என்றார். ஊரக பகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தல் பணியில் 14880 அலுவலர்கள் ஈடுபடுத்த பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here