குரும்பூர் அருகே அசன பண்டிகை பணம் கையாடல் சபை ஊழியர் மீது வழக்குப்பதிவு

0
86
fir

நாசரேத், செப்.11- குரும்பூர் அருகே அசன பண்டிகை பணத்தை கையாடல் செய்த சபை ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத் கீழத்தெருவை சேர்ந்தவர் வேதசிகாமணி பாஸ்கரன்(63). இவர் கடந்த 2014 வரை நாலுமாவடி சி.எஸ்.ஐ. சேகரத்திற்குபட்ட வீரமாணிக்கம் சபையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2009 முதல் 2013 வரை நடந்த அசன பண்டிகையின்போது வசூலான ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்தை கையாடல் செய்தது சேகர நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நாலுமாவடி சேகர கமிட்டி நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், வேதசிகாமணி பாஸ்கரன் அந்த பணத்தை கையாடல் செய்ததை ஒப்பு கொண்டு, அந்த பணத்தை விரைவில் செலுத்திவிடுவதாக உறுதியளித்தார். ஆனால் பணத்தை திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வந்தார்.

தொடர்ந்து கமிட்டி நிர்வாகிகள் கட்டாயத்தின்பேரில் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்தை வேதசிகாமணி பாஸ்கரன் கமிட்டி நிர்வாகிகளிடம் கொடுத்தார். மீதி பணம் ரூ.1.50 லட்சத்தை விரைவில் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் மீதி பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து சேகர செயலாளரான நாலுமாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஆபிரகாம்(56), வீரமாணிக்கம் சபை முன்னாள் பொருளாளர் தாமோதரன் ஜான் ஆகியோரும் கடந்த 2019 நவ.11ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து குரும்பூர் போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேதசிகாமணி பாஸ்கரன் போலீசாரிடம் 2 மாதத்தில் மீதி பணம் ரூ.1.50 லட்சத்தை செலுத்துவதாக உறுதியளித்தார்.

ஆனால் இதுவரை அவர் பணத்தை திருப்பி செலுத்தாததால், இதுகுறித்து சேகர செயலாளர் ஆபிரகாம் கடந்த ஜூன் 18ம் தேதி எஸ்பி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி, ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் மற்றும் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க குரும்பூர் போலீசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து குரும்பூர் போலீஸ் எஸ்ஐ தாமஸ், பணத்தை திருப்பி செலுத்தாத வேதசிகாமணி பாஸ்கரன் மீது பணம் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here