”நாங்கள் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் கிடையாது” – வரிந்து கட்டுகிறது தூத்துக்குடி வாதிரியார் சமுதாயம்

0
1080
vathiriyar

நாங்கள் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர். தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் நாங்கள் கிடையாது . எங்களை அந்த பிரிவில் தொடர்பு படுத்துவது தவறானது என தூத்துக்குடியில் நடந்த வாதிரியார் சமூதாய கூட்டத்தில் பேசப்பட்டது.

மேலும் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி, தமிழ்நாடு சோழகுல வாதிரிராசாக்கள் சமுதாய சங்கம் சார்பில் முக்குலத்தோர் பிரிவான வாதிரியார் சமுதாயத்தைச் சீர்மரபினர் (DNC) பட்டியலில் இணைத்து சாதிச் சான்றிதழ் பெற அரசாணை வெளியீட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி, தமிழ்நாடு சோழகுல வாதிரிராசாக்கள் சமுதாய சங்கம் மற்றும் வாதிரியார் சமுதாய பொதுமக்கள் சார்பில் வாதிரியார் சமுதாய கலந்தாய்வு கூட்டம் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பானு பிருந்தாவன் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்க மாநில தலைவர் சகாயராஜ் வாதிரி,தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தென்மண்டல கோட்ட பொறுப்பாளர் ஒத்தகடை கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயம் வாதிரி,தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தென்சென்னை மண்டல அமைப்பாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தொண்டரணி பொதுச்செயலாளர் V.S.மாரி மறவன் சிறப்புரை ஆற்றினார். நிர்வாகி சார்லஸ் வாதிரி நன்றியுரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரி மறவன், ’’தென்மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வரக்கூடிய வாதிரியார் சமுதாய மக்கள் முக்குலத்தோரில் கள்ளர் இனப்பிரிவை சார்ந்தவர்கள்.இவர்கள் தாய்வழி சமூகம் .முக்குலத்தோரில் உள்ள கொண்டையன் கோட்டை மறவர் சமூகத்தை போல் கிளை வழி கொண்டவர்கள். அக்கா மகளை சகோதர உறவாக கருதுபவர்கள்.அக்கா மகளை மனம் முடிக்க மாட்டார்கள்.

ஆனால் சிறிதளவு பண்பாடு ஒற்றுமையற்ற மாற்று சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் தங்கள் இனத்தில் 7 வது பிரிவாக வாதிரியார் இனத்தை சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை கேட்டு வருகின்றனர்.அதே போல் வாதிரியார் சமுதாயத்தினரின் அனுமதி இன்றி அவர்களை இழிவு படுத்தும் வகையிலும்,தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் வகையில் பேசி வரும் ஜான் பாண்டியன்,தங்கராஜ்,செந்தில் ,தினேஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதில் தென்னிந்தியஃபார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள்,தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்க நிர்வாகிகள்,மற்றும் வாதிரியார் சமுதாய ஊர் அம்பலக்காரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here