சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதிவிகளுக்கான பொதுத்தேர்வு

0
13
police news

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியா தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர் செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2020ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு குறித்து கடந்த 17.09.2020 அன்று விளம்பரம் வெளியிட்டு, அதில் கலந்து கொளள விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் 26.09.2020 முதல் 26.10.2020 வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி மேற்படி இணையாதளத்தின் மூலம் விண்ணப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ளவும், அவர்களுக்கு உதவவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்துள்ளார்.

இந்த உதவி மையம் தினமும் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். இதற்கான அலைபேசி தொடர்பு எண் 97874 80097 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்பு கொண்டால் உதவி மையத்தில் உள்ள காவல்துறையினர், விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here