விளாத்திகுளம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், திமுகவில் இணைந்தார்

0
157
markandeyan

தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வரயிருக்கிறது. எனவே தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வேலையை ஆரம்பித்துவிட்டனர். கட்சியில் உறுப்பினர் சேர்த்தல், ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், நிர்வாகிள் நியமனம் என கட்சித் தலைமை ஜரூர் காட்டி வருகிறது.

அதுபோல் அதிருப்தியாளர்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் சடங்குகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான மார்க்க்ண்டேயன், தனது பரிவாரங்களுடன் இன்று திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின், இனிதே வரவேற்று சேர்த்துக் கொண்டார்.

சென்னையில் இன்று நடந்த இந்த இணைப்பு நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, சாத்தூர்ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வை பலப்படுத்த, மார்க்கண்டேயன் பயன்படுவார் என திமுக தலைமை நம்புவதாக சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here