திமுக தேர்தல் அறிக்கையில் உங்கள் ஊர் பிரச்னைகள் இடம் பெற வேண்டுமா ?

0
78
dmk news

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

’’2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும் – தங்கள் மாவட்டத்தில் பிரச்னைகள் குறித்தும் இடம் பெற வேண்டிய சாரம்சங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க விரும்பும் கழக நிர்வாகிகள் – கழகத் தோழர்கள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

அத்துடன், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புவோர் ”manifesto2021@dmk.in” என்ற மின்னஞல் (email id) முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here