அ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி

0
177
sps

அ.தி.மு.க 49வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் ஏரல் பரணி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

அ.தி.மு.க கட்சியின் 49வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏரல் நகர அ.தி.மு.க சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. வாரந் தோறும் நடந்த இந்த போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் ஏரல் பரணி கிரிக்கெட் கிளப் அணி மற்றும் ஆழ்வார்திருநகரி ஆழ்வார் கிரிக்கெட் கிளப் அணி ஆகியவை மோதின.

இதில் ஏரல் பரணி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. ஆழ்வார்திருநகரி அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஏரல் சேர்மன் சுவாமி கோவில் திடலில் நடந்தது.

இவ் விழாவிற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமை வகித்து வெற்றி பெற்ற ஏரல் அணிக்கு ரூ10ஆயிரம் ரொக்கபரிசு மற்றும் வெற்றி கோப்பையை வழங்கி பேசினார். ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், ஏரல் வியாபாரிகள் சங்க தலைவர் தசரதபாண்டியன், அ.தி.மு.க சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணை தலைவர் தர்மராஜ, அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன், ஆழ்வார் திருநகரி கிழக்கு விஜயகுமார் மேற்கு ஜ்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை தலைவர் விஜயன், ஒன்றிய நிர்வாகிகள் ரத்தினசபாபதி, பண்டாரவிளை பாஸ்கர் பெருங்குளம் ராஜாமணி, அசோக்குமார், ராஜேஸ்குமார், நகர செயலாளர்கள் ஏரல் ஆத்திப்பழம், சாயர்புரம் துரைச்சாமி ராஜா, ஆறுமுகநயினார், மற்றும் நிர்வாகிகள் சிவகுமார், ஜெகன்ராஜ், கண்ணன், காத்திகேயன், பாபு, காளிமுத்து, பாலமகராஜன், பரணி, பசுபதி, பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாகளை சரவணன், முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here