தூத்துக்குடியில் வரும் 28ம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம்

0
66
geethjeevan

இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவான் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 28ம் தேதி புதன்கிழமை நடக்கிறது. கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் அக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகிக்கின்றனர்.

இக்கூட்டத்தில் கீதாஜீவன் எம்எல்ஏ சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் திமுக முப்பெரும் விழா நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச்செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here