தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15,26,28 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு – கலெக்டர் அறிவிப்பு

0
57
collector news

தூத்துக்குடி, ஜன.11:

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15, 26 மற்றும் 28ம் தேதிகளில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில், வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம், வரும் 28ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய மூன்று தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

அன்றைய தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ இவ்வாறு கலெக்டர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here