தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பிசியோதெரபி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

0
59
doctor

தூத்துக்குடி, பிப்.24:

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பிசியோதெரபி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக பிசியோதெரபி கவுன்சில் அரசாணை எண் 281/2009ல் குறிப்பிடப்பட்டுள்ள டாக்டர் முற்சேர்க்கை பயன்படுத்தக்கூடாது என்ற முரண்பட்ட ஷரத்தை நீக்கவேண்டும், அரசாணை திருத்தம் மேற்கொள்ளாமல் கவுன்சில் நடைமுறைபடுத்தக்கூடாது, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது செய்யப்பட்ட மாநில பிசியோதெரபி கவுன்சில் நியமன உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில் மாவட்டம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்படி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர்.செல்வின் ஜூலியஸ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் டாக்டர்.பத்மநாபன், மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர்.மணிகண்டன், செயலாளர் டாக்டர்.மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவினை கலெக்டரிடம் கொடுத்தனர்.

இதில், மாவட்ட பொருளாளர் டாக்டர்.அந்தோணி, உறுப்பினர் டாக்டர்.செந்தில் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here