தூத்துக்குடி திமுகவில் ஒரே குடும்பத்தினர்தான் 40 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார்கள் – எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பேச்சு

0
152
sdr

தூத்துக்குடி,ஏப்ரல்.03:

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மாலை காரநேசன் தியேட்டர் பகுதி, தேரடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர், மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது அதிமுக ஆட்சிமட்டுமே.

இப்போது 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது என்றால் அதற்கு அதிமுக அரசும் அதன் முதலமைச்சர் ஜெயலலிதாவுமே காரணம். மக்கள் மீது எந்த கவலையும்படாம இருந்தவர்கள் திமுகவினர். திமுகவினர் என்றாலே அது குடும்ப ஆட்சி என்றுதான் பொருள். தலைவருக்கும் தெரியும். அப்பா,மகன்,பேரன்,பேத்தி என எல்லாரும் வந்திடுவாங்க. அதேபோல் தூத்துக்குடி மாவட்ட திமுகவிலும் ஒரே குடும்பத்தினர்தான் 40 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார்கள்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here