தூத்துக்குடி மாவட்டத்தில் யார்..? எத்தனை பேர் அமைச்சர்..?

0
12
tuty dmk

பத்து வருடங்களாக ஆட்சி பொறுப்பில் இருந்து வந்த அதிமுகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது திமுக. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் என்பது அறிந்ததுதான். சபாநாயகர், அதற்கு அடுத்தப்படியாக அமைச்சர்கள் என முக்கிய பதவிகளுக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு தூத்துக்குடி மாவட்ட திமுகவினரிடையே இப்போது எழுந்திருக்கிறது.

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிற கீதாஜீவனும், திருச்செந்தூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிற அனிதாராதாகிருஷ்ணனுமே அந்த எதிர்பார்ப்பு களத்தில் உள்ளவர்கள்தான்.

கடந்த முறை எதிர் கட்சி எம்.எல்.ஏக்களாக இருந்து பணியாற்றியிருக்கிறார்கள் இருவரும். ஏற்கனவே அமைச்சராக இருந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். மாவட்டத்தில் ஒருவருக்கு என்கிற அடிப்படையில் பார்த்தால் இவர்களில் யாருக்கு முக்கியத்தும் கொடுப்பது என்று தலைமைக்கே குழப்பம் ஏற்பட வாய்ப்பு என்கிறார்கள். கலைஞரின் முரட்டு பக்தன் என்.பெரியசாமியின் மகள் என்பதாலும், வாங்கிய வாக்குகள் அதிகம் என்பதாலும் தனக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என கீதாஜீவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்கிறார்கள்.

தொடர்ந்து வெற்றி வாகைசூடி வருவதையும், தனக்கு தொகுதி மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்டவெளிவட்டாரங்களிலும் உள்ள செல்வாக்கையும் ஆதாரமாக வைத்து தனக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என அனிதாராதாகிருணன் நம்பி வருவதாக சொல்கிறார்கள்.

ஆக கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கோ அல்லது இரண்டுபேர்களில் ஒருவருக்கோ அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here