டாஸ்மாக் கடைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தடை செய்ய வேண்டும் – நாலுமாவடி மோகன் சி லாசரஸ் கோரிக்கை

0
37
mohanc lazaras

நாசரேத்,மே.07:

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தமிழக முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள வேண்டுகோ ளில் கூறியிருப்பதாவது:-

’’தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும், மு.க.ஸ்டாலினுக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத் தின் சார்பாக நாங்கள் வாழ்த்து தல் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசத்திலே ஒரு நல்ல ஆட்சி அமையவும்,நல்ல ஒரு முதலமைச்சர் வரவும் ஜனங்களுக்கு நன்மை உண்டாகவும்,பல நாட்கள் நாங்கள் ஆண்டவரிடத்தில் திரளான தேவ பிள்ளைகள் பிரார்த்தனை செய்தோம்.ஆண்டவர் இவர்களை தெரிந்தெடுத்து முதலமைச்சராக் கியதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம்.வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி ஜனங்களுக்கு நன்மை செய்யும்படிக்கு இவர்கள் தேவனுடைய ஊழியக்காரராயிருக்கிறார்கள் என்று வேதம் குறிப்பிடுகிறது.நாங்கள் அவர்களை ஒரு தேவனுடைய ஊழியக்கார்ராகவே மதித்து அவருக்காக ஜெபிக்கிறோம்.

இந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கும், தமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும், ஆசீர்வாதமும் உண்டாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் படியாக வாக்குபண்ணியிருக்கிற எல்லா நன்மையான திட்டங்க ளையும், ஆண்டவர் நிறைவேற்று வதற்குரிய ஞானத்தையும், பெல னையும்,கிருபைகளையும் கொ டுக்கவும்,அவர்கள் நல்ல சுகபெ லத்தோடு காத்துக்கொள்ளப்பட வும்,தொடர்ந்து இலட்சக்கணக் கான தேவபிள்ளைகள் இணை ந்து ஜெபிப்போம் என்று வாக்குக் கொடுக்கிறோம்.

முலமைச்சராக இருக்கிற உங்களுக்கு, இலட்சக்கணக்கான தேவ பிள்ளைகள் சார்பாக ஒரே ஒரு வேண்டுதலை உங்களிடம் வைக்க விரும்புகிறேன்.கடந்த சில வருடங்களாக இலட்சக்க ணக்கான குடும்பங்கள் மதுபா னத்தினால் பாதிக்கப்பட்டு சீரழி ந்து கொண்டிருப்பதை கண்கூ டாக காணலாம்.அது முதல்வரான உங்களுக்கும் தெரியும். தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டு அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி விட்டது.

எப்படியாகிலும் தமிழகத்தில் இந்த டாஸ்மாக் கடையை மூடி மதுபானத்திலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும் என்று இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் சார்பாக வேண்டுதலை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறோம்’’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here