நாசரேத்,ஜன.09:ஜனவரி 16, 17 வியாழன்,வௌ;ளிக்கிழமைகளில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை நடத்தும் ரெடீமர்ஸ் சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான தமிழர்திருநாள் மின்னொளி கபாடிப்போட்டி நாலுமாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழர் திருநாளைமுன்னிட்டு வருகிற 16,17வியா ழன், வௌ;ளிக்கிழமைகளில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட் டுத்துறை சார்பில், ஆறாம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான மின்னொளி கபாடிப் போட்டி நடைபெறுகிறது.போட்டிகள் தினமும் மாலை3 மணிக்கு துவங்கி விடிய, விடிய நடைபெறுகிறது. இப்போட்டிகளில் தமிழகத்திலுள்ள தலை சிறந்த அணிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். போட்டிகள் சர்வதேச தரத்தில் மேட் தளத்தில் நடைபெறுகிறது.தினமும் போட்டியை கண்டு களிக்க வரும் பார்வை யாளர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளர் மணத்தி கணேசன், ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார்,விளையாட்டுத்துறை சார்பில் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.