திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக அறப்போராட்டம்

0
43
admk sps

சட்ட மன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்து அதிமுக ஆட்சியை பறி கொடுத்தது. புதிதாக வந்திருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மூன்று மாதங்கள் வாய்ப்பு கொடுத்து அதன் பிறகு குறைகளை சுட்டிக் காட்டுவோம் தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எதிர்கட்சியான அதிமுக தெரிவித்திருந்தது.

கிட்டதட்ட இரண்டு மாதங்களை தாண்டும் நிலையில் ஆளும் கட்சியின் சில தவறுகளை சுட்டி காட்டியும், தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய அதிமுக முடிவு செய்திருக்கிறது. அதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் வரும் 28 ம்தேதி அதிமுகவினர் அவரவர் வீட்டின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இது குறித்து இன்று மாவட்டம் முழுவதும் ஆலோசனை கூட்டங்களை மாவட்ட செயலாளர்கள் நடத்தினார்கள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமைக் வகித்தார். அவைத்தலைவர் திருப்பாற்கடல் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், ’’நீட் மருத்துவ நுழைவு தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலின்டருக்கு ரூ.100மானியம், தடையில்லா மின்சாரம், குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறிய திமுக அரசை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு உண்மையாக ஆட்சி நடத்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நாளைமறுநாள் (புதன்கிழமை) அதிமுக சார்பில் அறப்போராட்டம் நடத்த தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தின்போது அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்களது வீடுகளின் முன்பு சமூக இடைவெளியுடன் பதாகைகளை ஏந்தி, கோரிக்கை முழக்கமிட்டு தங்களின் எதிர்ப்பினை தெரிவிப்பதுடன் தவறாமல் போராட்டத்தில் பங்கேற்றிடவேண்டும்’’ என்று கேட்டுக் கேட்டுக் கொண்டார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here