அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அரசாணை

0
14
news

சென்னை :அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, கலைப் பாட பிரிவுகளில் 25 சதவீதமும்; அறிவியல் பாட பிரிவுகளில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 25 சதவீதமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, பல்கலைகளின் அனுமதியை கல்லுாரிகள் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here