நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்பு துறையில் டிரைவர் வேலை : மார்ச் 20 க்குள் விண்ணப்பிக்கவும்

0
366
emplaiment news

நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள டிரைவர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிதாக வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர் பணிக்கு இரண்டு காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி :

இந்த பணிக்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் புதுப்பிக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலை 8 படி மாதம் ரூபாய் 19,500 முதல் ரூபாய் 62 ஆயிரம் வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பதற்கு ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும் குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அருந்ததியர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் 35 வயது வரையில் இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட டிரைவர் பணியில் சேருவதற்கு விருப்பமுள்ளவர்கள் கால்நடை பராமரிப்பு துறை மண்டல அலுவலகம் அல்லது namakkal.nice.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து மார்ச் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை 5/234 ஆசிரியர் காலனி மோகனூர் ரோடு நாமக்கல் 637001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here