’’தூத்துக்குடி மாவட்டத்தில் சமூகப்பரவல் இல்லை’’- சிறப்பு அலுவலர் குமார்ஜெயந்த் தகவல்

0
18
thoothukudi district

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட சிறப்பு அலுவலர் குமார் ஜெயந்த் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுனாமி காலனி, மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான டூவிபுரம் உள்ளிட்ட இடங்களில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தலைமையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மெற்கொண்டார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தேவையான வசதிகள், உணவுகள் , மருந்துகள், படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அலுவலர் குமார் ஜெயந்த்,’’தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம், அதே போல் காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது ஆய்வு செய்தோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 24584 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் 789 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 590 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது 226 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் வெளி மாநிலம் மற்றும் 155 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் சமூகப்பரவல் என்பது இல்லை’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here