தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளையில் மத்திய தொல்பொருள் அகழ்வராய்ச்சி துறையினர் செய்து வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையில் இன்று ஆய்வு பணியின் போது தமிழ் கிராவிட்டி எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன. கிராவிட்டி எழுத்துகள் இடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ள பானை ஓடுகள் அகழாய்வு பகுதியில் உள்ள மண்ணின் தன்மை கொண்டே காலத்தை துல்லியமாக கணிக்க இயலும் என தெரிவித்த அகழாய்வு துறையினர் கிராவிட்டி எழுத்துகள் என்பது கிறுக்கல் குறியீடாக கணக்கிட படுவதாகவும் மீண்டும் ஆழமான அகழ்வாய்வு பணியின் போது முழுமையான குறியீடு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்