தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை !

0
226
corona news

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் அந்த வைரஸை விரட்டும் வகையில் பகுதி வாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைபடுத்தி உரிய சிகிச்சை அளிக்கபடுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அப்படியொரு முகாம் இன்று தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் மன்றம் அருகில் உள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் நடத்தப்பட்டது. பத்திகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோரின் உத்திரவின் பேரில் முகாம் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளா; பிரபாகரன், பொருளாளர் சீனிவாசகன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் ஆகியோர் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தனர். டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவகுழு பரிசோதனை செய்தனர்.

நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் இசக்கிராஜா, ராஜாசிதம்பரம், சரவணப்பெருமாள், மன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சிதம்பரம், முத்துராமன், ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் மன்ற உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர். அதன்பின் காவலர்கள் மற்றும் பொதுமக்களும் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here