பண்டாரவிளையில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கினார் எஸ்.பி.சண்முகநாதன்

0
191
sps news

தூத்துக்குடி தெற்குமாவட்ட போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க த.அ.போ.க.நகர கிளை தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அ.தி.மு.க. உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சி பண்டாரவிளையில் வைத்து நடந்தது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் த.சு.போ.க அண்ணா தொழிற்சங்க தூத்துக்குடி நகர கிளை தொழிலாளர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அ.தி.மு.க. உறுப்பினர் கார்டுகளை தூத்துக்குடி நகர கிளை நிர்வாகி கல்வி குமாரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர கிளை போக்குவரத்து தொழிலாளர்கள் தொப்பை கணபதி, ஆதி வெள்ளையா, பொன்னம்பலம், முருகன், திருமணி,செந்தில் முருகன், லிங்கபாண்டி , ஊர்காவல் பெருமாள், பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் த.அ.போ.க.அண்ணா தொழிற்சங்க தூத்துக்குடி நகர கிளை தொழிலாளர்கள் நிர்வாகி கல்வி குமாரிடம் தொடர்பு கொண்டு தங்களது உறுப்பினர் கார்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர் நிர்வாகிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here